5 வருஷமா நடந்த சூட்டிங்... ஒருவழியா முடிஞ்சிடுச்சு... செப்டம்பர்ல ரிலீசாகும் பிரம்மாண்ட படம்! - Yarl Voice 5 வருஷமா நடந்த சூட்டிங்... ஒருவழியா முடிஞ்சிடுச்சு... செப்டம்பர்ல ரிலீசாகும் பிரம்மாண்ட படம்! - Yarl Voice

5 வருஷமா நடந்த சூட்டிங்... ஒருவழியா முடிஞ்சிடுச்சு... செப்டம்பர்ல ரிலீசாகும் பிரம்மாண்ட படம்!
அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா இணைந்து நடித்துவந்த பிரம்மாஸ்திரம் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சமூகவலைதளங்களில் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

பிரம்மாஸ்திரா படம்

பாலிவுட்டில் அயன் முகர்ஜி இயக்கத்தில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்தப் படம் கடந்த 2018ல் சூட்டிங் துவங்கப்பட்டது. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் முதல்பாகம் கடந்த 2019ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சூட்டிங் நிறைவு

ஆனால் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது. தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டு ஆலியா பட் சூட்டிங் நிறைவடைந்துள்ளதை பகிர்ந்துள்ளார்.

காசியில் நிறைவடைந்த சூட்டிங்

சூட்டிங் நிறைவடைந்ததை கூற தான் தொடர்ந்து விருப்பத்துடன் காத்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் காசியில் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து ஆலியாபட் ரன்பீர் கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ள புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் அயன் முகர்ஜி அறிவிப்பு

இயக்குநர் அயன் முகர்ஜியும் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இந்தப் படம் தன்னுடைய வாழ்நாள் பயணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 5 வருட சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 மொழிகளில் வெளியாகும் படம்

புனிதமான வாரணாசியில் படம் நிறைவடைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், படம் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாவது குறித்தும் தெரிவித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

பிரம்மாண்டமான அனுபவம்

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். படத்தின் சூட்டிங் நடைபெற்றபோதே படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றன. படம் மிகவும் பிரம்மாண்டமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post