மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் நிச்சயதார்த்த புகைப்படம் - Yarl Voice மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் நிச்சயதார்த்த புகைப்படம் - Yarl Voice

மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் நிச்சயதார்த்த புகைப்படம்மெல்போர்ன்: மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடிகளின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தை கலக்குகிறது. 

மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக  திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக காதலர்கள் இருவரும் அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில்  அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனை பலர் பகிர்ந்திருந்தனர். மேக்ஸ்வெல்லின் திருமணம் அவரது நெருங்கிய நண்பர்கள் 350 பேர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.

இந்நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் தனது மனைவி வினி ராமனின் புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார், அதில் அவர்கள் தங்கள் நிச்சய மோதிரங்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர். புகைப்படத்தில், தம்பதியினர் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி இருவரும் ஒன்றாகப் பயணிப்பது போல் உள்ளனர். 

"காதல் என்பது நிறைவுக்கான தேடல், உன்னுடன் நான் முழுமையாக உணர்கிறேன்" என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார். '18.3.2022' அன்று, மேக்ஸ்வெல் தமப்தியினர் தங்கள் உறவின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த, இதயம், மணமகள் மற்றும் மணமகன் எமோஜிகளையும் பயன்படுத்தி உள்ளனர். வினிராமன் நிச்சயதார்த்ததில் மேக்வெலுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஆல் தக்கவைக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் 2022 இன் ஆரம்ப போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post