மக்கள் தற்போது ஜனாதிபதியை நம்பவில்லை.. நாமும் வீதியில் இறங்க முடியாது.. வரிசைகளுக்குத் தீர்வு காணவும் - பின்வரிசை எம்.பி.கள் குழு - Yarl Voice மக்கள் தற்போது ஜனாதிபதியை நம்பவில்லை.. நாமும் வீதியில் இறங்க முடியாது.. வரிசைகளுக்குத் தீர்வு காணவும் - பின்வரிசை எம்.பி.கள் குழு - Yarl Voice

மக்கள் தற்போது ஜனாதிபதியை நம்பவில்லை.. நாமும் வீதியில் இறங்க முடியாது.. வரிசைகளுக்குத் தீர்வு காணவும் - பின்வரிசை எம்.பி.கள் குழுதற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் உடனடியாக ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று கோருகிறது.

மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் காரணமாக தானும் வீதிக்கு வர முடியாத நிலையில் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், நல்லதையும் கெட்டதையும் சொல்வதே குழுவின் கொள்கை என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அரசாங்கம் மீது மக்களால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு நிச்சயமாக கட்டியெழுப்பப் படும் என ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்த போதிலும், மக்கள் அவரை இன்னும் நம்புவார்களா என்பது கேள்விக்குறி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

வரிசைகளால் மக்கள் அவதிப்படுவதாகவும், இனி இதை மக்கள் தாங்குவது கடினம் என்றும்  அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post