தேசிய அரசாங்கத்திற்கான வேண்டுகோள்களை நிராகரித்தார் ரணில் - அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு கோரிக்கை - Yarl Voice தேசிய அரசாங்கத்திற்கான வேண்டுகோள்களை நிராகரித்தார் ரணில் - அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு கோரிக்கை - Yarl Voice

தேசிய அரசாங்கத்திற்கான வேண்டுகோள்களை நிராகரித்தார் ரணில் - அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு கோரிக்கை



நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பிரதமர் மகிந்த ராஜபக்சஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சஆகியோருடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன
எனினும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நிராகரித்துள்ளதுடன்  ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என  குறிப்பிட்டுள்ளன.
தனிப்பட்ட ரீதியில் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய நெருக்கடிகள் குறித்து பிரதமருடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டுள்ளார் என முன்னாள் பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதியுடனோ அல்லது பிரதமருடனோ அவர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவை தெரிவித்துள்ளன.
எனினும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைகளிற்கான அடிப்படை காரணங்களை கண்டறியமுயலவேண்டும் அதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணலாம் என தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தேசிய கொள்கையொன்று குறித்து இணக்கப்பாட்டிற்குவரவேண்டும் அதன் மூலம் நாட்டை 15 வருடங்களிற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இ;ந்த தேசிய கொள்கையை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டவுடன் தேர்தலைநடத்தவேண்டும்,அதன் மூலம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேசிய கொள்கை மூலம் நாடு இன்னுமொரு நெருக்கடிக்குள் சிக்காத நிலையை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்,அடுத்த அரசாங்கம் எதுவாகயிருந்தாலும் அவர்கள் இந்த கட்டமைப்பை அடிப்படையாக வைத்து செயற்படவேண்டும்,அல்லது கொள்கைகள் தொடர்ந்தும் மாறும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என ரணில்விக்கிரமசிங்க தனது கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிற்கு தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post