ஐக்கிய மக்கள் சக்தி ஒரு உறுப்பினர் கூட தேசிய அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தி இணையத்தளமொன்றிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எவரும் அரசியல் தற்கொலையில் ஈடுபடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாங்கள் யாரும் தேசிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்பது உறுதியான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக தெரிவிப்பது கட்டுக்கதை. இந்தியா தொடர்ச்சியாக என்னுடன் தொடர்பில் உள்ளது. அவர்கள் இதனைச் செய்ய மாட்டார்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்தார் என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Post a Comment