யாழ் துரையப்பா வில் மோதிக்கொள்ளும் வடக்கு தெற்கு மாகாண அணிகள் - Yarl Voice யாழ் துரையப்பா வில் மோதிக்கொள்ளும் வடக்கு தெற்கு மாகாண அணிகள் - Yarl Voice

யாழ் துரையப்பா வில் மோதிக்கொள்ளும் வடக்கு தெற்கு மாகாண அணிகள்இலங்கை உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் மாகாணங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் வடமாகாணத்தை எதிர்த்து தென் மாகாணம் நாளை சனிக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 3 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும் முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வருமான  இமானுவேல் ஆனல்ட் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை அரியாலையில் உள்ள யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் முதன்முறையாக இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி யாழில் இடம்பெறுவதையிட்டு மகிழ்சி அடைகிறோம்.

 எமது வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவம்  வீரரும் இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணி வீரருமான டட்சன் பியூலஸ் அகாலமரணமடைந்தமை எமக்கும் வீரர்களும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அவரது மரணம் தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகங்களை வெளியிட நிலையில் அது தொடர்பில் மாலத்தீவு அரசாங்கமும் இலங்கை அரசாங்கத்துக்கும் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகிறது.

ஆகவே இறந்த உதைபந்தாட்ட வீரனுக்கு காணிக்கை செலுத்தும் முகமாக வட மாகாண உதைபந்தாட்ட அணி கிண்ணத்தை கைப்பற்ற மக்கள் அணி திரண்டு ஆதரவு தர வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post