மூளாயில் இடம்பெற்ற விபத்தில் காரைநகர் வாசி உயிரிழந்தார்! -இளைஞர் ஒருவர் படுகாயம்- - Yarl Voice மூளாயில் இடம்பெற்ற விபத்தில் காரைநகர் வாசி உயிரிழந்தார்! -இளைஞர் ஒருவர் படுகாயம்- - Yarl Voice

மூளாயில் இடம்பெற்ற விபத்தில் காரைநகர் வாசி உயிரிழந்தார்! -இளைஞர் ஒருவர் படுகாயம்-




மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். 

இன்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நியு கமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் வாரிவளவை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே காயமடைந்தார். 

மூளாய் - மாவடி வீதியில், காளி கோயிலுக்கு சமீபமாக இவ்விபத்து இடம்பெற்றது. மேற்படி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் உயிரிழந்தவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் அதிக இரத்தம் வெளியேறியிருந்தது. 

சம்பவ இடத்திற்கு விநை;த வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலமும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post