சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை இலங்கை அரசாங்கம் இராணுவ செலவீனங்களிற்கு பயன்படுத்தலாம் - ஹரி ஆனந்த சங்கரி - Yarl Voice சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை இலங்கை அரசாங்கம் இராணுவ செலவீனங்களிற்கு பயன்படுத்தலாம் - ஹரி ஆனந்த சங்கரி - Yarl Voice

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை இலங்கை அரசாங்கம் இராணுவ செலவீனங்களிற்கு பயன்படுத்தலாம் - ஹரி ஆனந்த சங்கரி



சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை இலங்கை அரசாங்கம் இராணுவ செலவீனங்களிற்கு பயன்படுத்தலாம் - ஹரி ஆனந்த சங்கரி சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள நிதி உதவியை  அரசாங்கம் இராணுவ செலவீனங்களிற்காக பயன்படுத்தலாம் என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கு எழுதிய கடிதத்தில்  தெரிவித்துள்ளார்
அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது

கனடாவின் scarborough rough parks on ontario    தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்  இலங்கையில் மோசமடையும் பொருளாதார நிலைமையை நான் ஆழ்ந்த கரிசனையுடன் அவதானித்து வருகின்றேன்.அதிலிருந்து விடுபடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிகின்றேன்.

இலங்கையின் கட்டுக்கடங்காத இராணுவ செலவீனங்களிற்காக சர்வதேச நாணயநிதியம் அந்த நாட்டைபொறுப்பாளியாக்கவேணடும் இலங்கை அந்த செலவீனத்தை குறைக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கவேண்டும் - இலங்கை சமாதானம்  பொறுப்புக்கூறல் - நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னெடுப்பதை உறுதி செய்யவேண்டும்  என்பதையும்  வலியுறுத்துவதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்து வருவதாலும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளதாலும்.1948 இல் சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை தனது மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களிற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர் - சமூகத்தின் பலவீனமான நிலையில் உள்ள மக்கள் கைவிடப்படுகின்றனர் சமூகம் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலும் அரசாங்கம் கடந்த வருடத்தை விட பாதுகாப்பு செலவீனத்தை  14 வீதம் அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் மொத்த செலவீனத்தில் இது 15 வீதமாக காணப்படும்இ.
சர்வதே நாணய நிதியம் நிதிவழங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் இலங்கையில் மில்லியன் கணக்காண மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இந்த நிதி வழமை போல இராணுவத்தினருக்கு ஆதரவளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

இலங்கை நீண்டகாலமாகவே களங்கப்படுத்தப்பட்ட மனித உரிமை வரலாற்றை கொண்டுள்ளதுஇஇராணுவ செலவீனங்கள் தற்போதைய அதிதேசியவாத அரசாங்கத்தின் ஆபத்தான கருத்துக்களை அதிகரிப்பதுடன் தமிழர்தாயகப்பகுதிகளில் இனப்படுகொலைக்கான நிதியையும் அதிகரிக்கின்றது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் பாரதூரமான சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் அவர்கள் அதற்கான  நீதியிலிருந்து தப்பியுள்ளனர்.
தங்களுடைய தவறான நிர்வாகம் மற்றும் பரம்பரை ஆட்சி குறித்த அதீத மோகம் காரணமாக இலங்கை மண்டியிடும் நிலையை ராஜபக்சாக்கள் ஏற்படுத்தியுள்ளமை குறித்து சர்வதேச நாணயநிதியம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

இலங்கையை தற்போதைய நிலையிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் முயற்சிகள் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படு;த்துதல் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதை ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினதும் ஐநாவின் ஏனைய நிபுணர்களினதும் பல அறிக்கைகள் இராணுவம் தண்டணையிலிருந்து விடுவி;க்கப்பட்ட நிலையில் தமிழர்களி;ற்கு எதிராக பாரிய அநீதிகளில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

சர்வதேச மனித உரிமை மனிதாபிமான சட்டங்களை பாரதூரமாக மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாhகள் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

இராணுவம் சிவில் நிர்வாகத்தின் பணிகளை கையகப்படுத்தியுள்ளதுடன் நில ஆக்கிரமிப்பிலும் ஈடுபடுகின்றது.
இராணுவ செலவீனங்களை குறைப்பது என்பது 2022 பெப்ரவரி 25 ம்திகதி ஐநா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையுடன் தொடர்புபட்ட விடயம்.

இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்துவது மோசமாக நடத்துவது சித்திரவதை செய்வது போன்ற போன்றவற்றை தொடர்வதை சுட்டிக்காட்டிய ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இராணுவமயமாக்கல் இனதேசியவாதம் நோக்கிய நகர்வுகள் தமிழர்களும் ஏனைய குழுக்களும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் நிலையை உருவாக்குகின்றன என  தெரிவித்துள்ளார்.

இராணுவ செலவீனங்களை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் வாழ்க்கை மீது படையினரின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரையுடன் தொடர்புபட்டது.

இலங்கை மீது விடுக்கப்பட்ட ஓரேயொரு எச்சரிக்கையாக இது மாத்திரம் காணப்படக்கூடது மாறாக இது ஆரம்ப புள்ளியாக அமையவேண்டும் பொதுமக்களி;ன் நலனிற்காக உணவு கல்வி சுகாதாரம் அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றிற்கான  செலவீனங்களை தொடர்வது அவசியம்.

இலங்கை தற்போது எந்த வித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளாத நிலையி;ல் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தினருக்கான தேவையற்ற செலவீனங்களி;ற்காக அந்த நாட்டை பொறுப்பாளியாக்கவேண்டும்.
இந்த முக்கியமான தருணத்தில்- இலங்கையில் காணப்படும் நிதிசார்ந்தஸ்திரமின்மையை இராணுவத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு சர்வதேச நாணயநிதியத்திற்குள்ளது - இலங்கை அவ்வாறு செயற்பட்டால்- இலங்கை அரசாங்கத்தின்  தொடரும் கொடுமைகளை  சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளது என்ற கருதப்படும் நிலைமை உருவாகும்.

சர்வதேச நாணய நிதியம் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு என்பது இலங்கையில் உள்ள தமிழர்கள் முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை குறைமதிப்பி;ற்கு உட்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது.

சர்வதேச நாணயநிதியம் தனது வாக்குறுதிகளை காப்பாற்றும் -இலங்கைக்கான மேலதிக உதவிகள் சர்வதேச மனித உரிமை நியமங்களின் அடிப்படையில் அமைவதை உறுதி செய்யும் என கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post