” தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு, புதிய பிரதமருடன் கடமையாற்ற தயாராகுங்கள்.” – என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று அதிரடியாக செய்தி வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு நேற்று சென்ற பிரதமர், அங்கு ஊழியர்களுடன் மனம் திறந்து கலந்துரையாடியுள்ளதுடன் எதிர்வரும், தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ஒருவர் அலரி மாளிகைக்கு வருவார் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தனக்கு சேவையாற்றியது போல், புதிய பிரதமருக்கு சிறப்பாக சேவையாற்றுமாறு பிரதமர் ஊழியர்களிடம் கோரியுள்ளார்.
நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்காகவே புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதில் எவ்வித அரசியல் மோதல்களும் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு பெருகிவருகின்றது. 11 கட்சிகளின் பிரதிநிதிகள்கூட தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆலோசனை பெற்றுவருகின்றனர்.
தாம் அடுத்து என்னசெய்ய வேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் ரணிலுடன் மந்திர ஆலோசனை நடத்திவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.
Post a Comment