யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வீடொன்றில் காணப்பட்ட முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை இடம்பெற்ற
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment