யாழில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழப்பு! - Yarl Voice யாழில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழப்பு! - Yarl Voice

யாழில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழப்பு!யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர்.

இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது.

அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியிலே நீராடிக் கொண்டிருந்தபோது மின்சார விபத்து ஏற்பட்டு மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் ஓடிச் சென்ற நிலையில் இவருக்கும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியினருக்கு ஒரு மகள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

இருப்பினும் இவர்கள் உயிரிழந்தது அயலவர்களுக்குத் தெரியாத நிலையில் பல்கழைக்கழகம் சென்று வீடு திரும்பிய மகள் பெற்றோரைத் தேடியபோது இருவரும் கிணற்றுக்கு பக்கத்தில் இருவரும் உயிரிழந்த நிலையில் குற்றுயிராக கிடந்தனர்.

கணவனுக்கு 59 வயது எனவும் மனைவிக்கு 55 வயது எனவும்போலீசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post