யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்கான காத்திருந்ததுடன் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment