மருந்து தட்டுப்பாட்டால் யாழ்.போதனாவில் கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்! - Yarl Voice மருந்து தட்டுப்பாட்டால் யாழ்.போதனாவில் கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்! - Yarl Voice

மருந்து தட்டுப்பாட்டால் யாழ்.போதனாவில் கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் மருந்துகளுக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அவை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என  தெரிவித்தார் 

0/Post a Comment/Comments

Previous Post Next Post