எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து பௌத்தமயமாக்க ஒருபோதும் அனுமதியோம்! காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் - Yarl Voice எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து பௌத்தமயமாக்க ஒருபோதும் அனுமதியோம்! காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் - Yarl Voice

எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து பௌத்தமயமாக்க ஒருபோதும் அனுமதியோம்! காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம்



எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கொடூர யுத்தத்தை நடாத்தி , எமது இனத்தினை அழித்தவர்களுக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றினையை வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் ஆட்டம் கண்டு கொண்டு உள்ளது. இந்நேரத்தில் நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போராட்ட முன்வர வேண்டும். 

இந்த இன்னல்கள் , அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் நேற்றைய தினம் போராட்டத்தினை நடாத்தி இருந்தோம். 

அதன் போது , வயது முதிர்ந்த தாய்மார்களை ஈவிரக்கமின்றி குண்டாந்தடிகளால் அடித்தும் , சப்பாத்து கால்கள் மிதித்தும் எங்களை அவமானப்படுத்தி அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். 

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும். 

எங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள் , இன்று மக்களுக்கு அரிசி இல்லை  , பெற்றோல் இல்லை, டீசல் இல்லை என சொல்லுபவர்கள் வடக்கில் வந்து பொருளாதார நிலையத்தை திறக்கின்றார்கள். 

அவர்களிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் வரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எங்களின் போராட்டம் தொடரும். 

எமக்கு பின்னால் நின்று எமக்காக குரல் கொடுக்க எமது தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். 

நேற்றைய போராட்டத்தின் போது எமது முல்லைத்தீவு மாவட்ட சங்க தலைவி அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

அதேவேளை வவுனியா மாவட்ட தலைவியும் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தினம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அவர் நடக்க முடியாத நிலையில் உள்ள போதும் அவருக்கு உடல் நிலை சரியாகி விட்டது என வைத்தியர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வைத்தியர்கள் கூட அரசாங்கத்திற்கு பரிவட்டம் பிடிக்க தொடங்கி விட்டார்களோ என சந்திக்கிக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post