தேவதை வந்துவிட்டாள்… உக்ரைன் நடிகையை கொண்டாடும் சிவகார்த்திகேயன் டீம் - Yarl Voice தேவதை வந்துவிட்டாள்… உக்ரைன் நடிகையை கொண்டாடும் சிவகார்த்திகேயன் டீம் - Yarl Voice

தேவதை வந்துவிட்டாள்… உக்ரைன் நடிகையை கொண்டாடும் சிவகார்த்திகேயன் டீம்



சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல், தன் சொந்த திறமையால் மட்டுமே’ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், படத் தயாரிப்பு, பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார்.

இப்போது சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்கே 20’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் இருமொழிகளில் தயாராகிறது.

இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிப்பதாக, பிப்ரவரி மாத தொடக்கத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

இந்நிலையில்’ எஸ்கே 20’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த இளம் நடிகை நடிக்கவுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தயாரிப்பாளர்கள் கதாநாயகியை வரவேற்று, “அழகான தேவதை இப்போதுதான் மெஸ்மரைசிற்கு வந்துள்ளது. #SK20 குழு, நடிகை #மரியா ரியாபோஷப்காவை நாயகியாக வரவேற்கிறது என்று ட்வீட் செய்தனர்.

எஸ்கே 20 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், நவீன் பாலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. தற்போதைய ஷெட்யூல் மார்ச் இறுதி வரை நடைபெறும். அதன் பிறகு ஒரு சிறிய பகுதி மட்டுமே முடிக்கப்பட உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்துக்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் எல்எல்பி மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு தமன் இசையமைக்க, பீஸ்ட் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதற்கிடையே, சிவகார்த்திகேயன் ‘டான்’ படம்’ மே 13 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  அயலான் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
பீஸ்ட் படத்தில், அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் அரபிக் குத்து பாடல் கிட்டத்தட்ட 210 மில்லியன் வியூசை தாண்டி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post