சர்வகட்சிகூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
அரசாங்கம் நிதிவிடயத்தில் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவதை தான்னால் காணமுடியவில்லை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து சமர்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் இறுதி அறிக்கை இன்னமும் எங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்,
ஆனால் அதனை மறுத்த ரணில் இல்லை ஏற்கனவே அவர்கள் அதனை வெளியிட்டு விட்டார்கள் என குறிப்பிட்டார்,இது குறித்த சந்தேகத்திற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி அறி;க்கையை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு சீற்றத்துடன் பதிலளித்த நிதியமைச்சர் என்னிடம் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கை உள்ளது ஆனால் அது நகல்வடிவம் மாத்திரமே என குறிப்பிட்டார்.
உங்களிற்கு நகல்வடிவ ஆவணம் வேண்டுமா என பசில் ரணிலை பார்த்து கேட்டார் இதற்கு பதிலளித்த ரணில் உங்களால் முடியும் என்றால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என தெரிவித்தார்.ஆனால் நிதியமைச்சர் அதற்னு மறுப்பு தெரிவித்தார்.
Post a Comment