இந்திய அரசாங்கத்தினால் யாழ் மீனவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு! - Yarl Voice இந்திய அரசாங்கத்தினால் யாழ் மீனவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு! - Yarl Voice

இந்திய அரசாங்கத்தினால் யாழ் மீனவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!




"இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்" எனும் தொனிப்பொருளில் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இன்றையதினம் மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இவ் உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாக கையளித்தார்.

இதன்போது 600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் சம்பிரதாயபூர்வமாக இந்திய உயர்ஸ்தானிகர் இதனை இன்று வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தூதரக அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் ஜெ.சுதாகரன் மற்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் , கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post