ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் யாழில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் யாழில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் யாழில் ஆரம்பித்து வைப்புஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி நிறுவனமும், யாழ் மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகமும் இணைந்து நடாத்தும் "ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்" யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இன்று யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாமில் கலந்துகொள்ளும் பயனாளிகள் தமது பதிவுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


இந்நிகழ்வில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தூதரக அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ்,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், பிரதேச செயலர்கள்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post