நாட்டின் ஆட்சியாளர்கள் மீது மக்கள் முட்டை எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை- ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் - Yarl Voice நாட்டின் ஆட்சியாளர்கள் மீது மக்கள் முட்டை எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை- ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் - Yarl Voice

நாட்டின் ஆட்சியாளர்கள் மீது மக்கள் முட்டை எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை- ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தின் மீது முட்டை எறியப்பட்டதன் பின்னணியல் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே உள்ளார் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்  சமிந்த விஜயசிறி மக்கள் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மீது முட்டை எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்களால் ஐக்கிய மக்கள் சக்தி அமைதியாக்கவோ தடுக்கவோ முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 15ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தொடருவோம்,இன்று முட்டை எறிவதில் முன்னணியில் நின்ற இந்த நாடாளுமன்ற உறுப்பினரை எங்களுடன் மோதவருமாறு சவால் விடுக்கின்றேன்- என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள மக்கள் மீது இவர் தாக்குதல் நடத்தினால் அவர்கள் இவர்களை விரட்டியடிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post