கூட்டமைப்பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! பொலிஸில் முறைப்பாடு - Yarl Voice கூட்டமைப்பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! பொலிஸில் முறைப்பாடு - Yarl Voice

கூட்டமைப்பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! பொலிஸில் முறைப்பாடுமானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். 

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை  மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் , நாடாளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி , அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். 

அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது . 

0/Post a Comment/Comments

Previous Post Next Post