கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் விபத்தில் பலி - Yarl Voice கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் விபத்தில் பலி - Yarl Voice

கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் விபத்தில் பலிகோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. 
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்தார். 

நேற்றிரவு கரவெட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட் டியுடன் மோதி விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post