யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை திறப்பது குறித்து ஆராய்வு - Yarl Voice யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை திறப்பது குறித்து ஆராய்வு - Yarl Voice

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை திறப்பது குறித்து ஆராய்வு



யாழ்.மாநகர சபைக்கென்று இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவ்வாறு நடைபெற்றால் செய்யவேண்டிய முன்னாயத்தங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து இந்தியத் துணைத்தூதர் , மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோர் நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்திற்கு விஜயம் செய்து ஆராய்தனர்.

மிக நீண்டகாலமாக திறக்கப்படாமல் இருக்கின்ற மேற்படி யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திறக்கபடாலம் என்றும் குறித்த திறப்பு விழா காணொளி வழியாக எளிமையான முறையில் நடைபெறுவதற்கான சாத்தியங்களே உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் நடைபெற்ற மாநகர சபை அமர்வின் போது மாநகர முதல்வர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு இந்தியத் துணைத்தூதர் , மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோர் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்ததன் அடிப்படையில் முன்னாயத்த நடவடிக்கையாக இன்று முதல் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தினை தூய்மைப்படுத்துகின்ற மற்றும் அதனை அழகு படுததுpன்ற செயற்பாடுகளை யாழ்.மாநகரசபை இந்திய துணைத்து{}தரகம் மற்றும் கட்டிட ஒப்பந்த நிறுவனம் ஆகிய இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பண்பாட்டு மையத்தின் வெளிப்புறநச் சூழலினை அழகுபடுத்துகின்ற செயற்பாடுகளை இரவு பகலாக யாழ்.மாநகர சபை ஆரம்பித்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post