யாழ். நெல்லியடியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் - Yarl Voice யாழ். நெல்லியடியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் - Yarl Voice

யாழ். நெல்லியடியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்ஜீவநதி பதிப்பகத்தின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு நாளை சனிக்கிழமையும் (26.3.2022), மறு தினம் ஞாயிற்றுக்கிழமை யும்(27.3.2022) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.

குறித்த புத்தகக் கண்காட்சியில் 1000 இற்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் கண்காட்சியின் இரு நாட்களிலும் எட்டு நூல்கள் வெளியீடு செய்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெறும்.

மேற்படி கண்காட்சியில் நூல்களைக் கொள்வ னவு செய்பவர்களுக்கு அனைத்துப் புத்தகங் களுக்கும் 20 வீத விலைக் கழிவு வழங்கப்பட வுள்ளது எனவும், அனைவரையும் கண்காட்சி நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post