சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய -பசுபிக் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை - Yarl Voice சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய -பசுபிக் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை - Yarl Voice

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய -பசுபிக் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் Changyong Rhee இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதே சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இதேவேளை நேற்று சர்வதேச நாணய நிதியத் தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரம் பற்றிய அண்மைய  ஆய்வு மற்றும் பெப்ரவரி பிற்பகுதியில் IMF இன் கூட்டத்தில் IMF நிர்வாக இயக்குநர்கள் கோடிட்டுக் காட்டிய மதிப்பீடுகள் பற்றிய விபரங்களை அதிகாரிகள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கையிருப்புகளை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான பாதையில் கொண்டு செல்லவும் கூடிய சாத்தியமான வேலைத்திட்டம் குறித்து இலங்கை ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான பேச்சுவார்த் தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post