இலங்கை இனப்படுகொலையை திமுக அரசு தடுக்க மறந்தது ஏன்? பிரேமலதா கேள்வி - Yarl Voice இலங்கை இனப்படுகொலையை திமுக அரசு தடுக்க மறந்தது ஏன்? பிரேமலதா கேள்வி - Yarl Voice

இலங்கை இனப்படுகொலையை திமுக அரசு தடுக்க மறந்தது ஏன்? பிரேமலதா கேள்வி
உக்ரைனில் உள்ள தமிழர்களை பாதுகாப்போம் எனக் கூறும் திமுக அரசு, இலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது காப்பாற்ற மறந்தது ஏன் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வியெழுப்பினார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே தேமுதிக கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தெற்கு ஒன்றிய செயலாளர் சேஷாத்ரி இல்ல நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கில் பாரதிய ஜனதா கட்சியும், ஒன்றில் ஆம் ஆத்மியும் வென்றிருக்கிறார்கள். வாழ்த்துகள். அது இங்கு பிரதிபலிக்குமா என்பதற்கு, இப்போது பதிலளிக்க முடியாது. இன்னும் நாட்கள் அதிகம் உள்ளதால் அதில் நிறைய மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.” என்றார்.

திமுக ஆட்சி குறித்து எழப்பிய கேள்விக்கு...நேற்று தமிழக முதல்வர் உக்ரைனில் உள்ள தமிழர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவோம் என தெரிவித்தார்கள். வாழ்த்துகள். தமிழர்கள் எங்கு இருந்தாலும் பாதுகாப்போம் எனக் கூறும் திமுக அரசும், காங்கிரசும் ஆண்ட நேரத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தடுக்க மறந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post