யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட ஈ.பி.டி.பி தீர்மானம் - Yarl Voice யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட ஈ.பி.டி.பி தீர்மானம் - Yarl Voice

யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட ஈ.பி.டி.பி தீர்மானம்மக்கள் நலன்கருதிய வகையில் பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ். மாவட்ட செயலகம் அவற்றை கட்டுப்படுத்தி தனது தன்னிச்சையான செயற்பாடுகளை திணிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணள் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் - 
மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களது விருப்புகளுக்கேற்ப அவசியமானதும் முன்னுரிமையிலானதுமான திட்டங்களை மக்களிடமிருந்து நேரடியாக பெற்று அவற்றை செய்து கொடுப்பதே மக்களிளின் தற்போதைய தேவையாக உள்ளது.

ஆனால் யாழ் மாவட்ட அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை கணக்கில் கொள்ளாது தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டுவருதால் மக்களின் அவசிய தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. 

குறிப்பாக பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுயாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ் மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது. அத்துடன் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கூறியுள்ளார்.

 ஆனால் யாழ் மாவட்டத்தில் மாவட்ட செயலகம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக காணப்படுகின்றது. 
மாவட்ட செயலகத்தின் இவ்வாறான நிலைமை மக்களின் தேவைகருதிய செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதை பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் நாளாந்தம் முறையிட்டவண்ணம் உள்ளனர். 


இவை தொடர்பில் நாம் பிரதேச செயலகங்களில் சுட்டிக்காட்டும்போது அவ் அதிகாரிகள் இவ் உத்தரவுகளை மாவட்ட செயலகமே வழங்குவதாக குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் மாவட்ட செலகத்தின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதை நாம் நாளாந்தம் காணமுடிகின்றது.

குறிப்பாக அரசாங்கத்தால் வட்டாரத்துக்கு நான்கு மில்லியன் முன்மொழிவுகளை அரியல் இன்றின் வட்டாரத்தின் பொது அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில்  யாழ்ப்பாணத்தில் மட்டும் மாறுபாடாக  உள்ளது. 

இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 
இதேநேரம் குறித்த திட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்த உறுப்பினர்கள், யாழ் மாவட்டத்தில் இவ்வாறான தன்னிச்சையான நடைமுறையை யாழ் மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது .

ஆகவே யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post