இலங்கையில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது - Yarl Voice இலங்கையில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது - Yarl Voice

இலங்கையில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளதுஇலங்கையிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின் வீசாவை நீடிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

21.02.2022 வரை செல்லுபடியாகும் சுற்றுலா விசாவைக் கொண்டிருந்த ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கான செல்லுப டியாகும் விசா 2 மாதங்களுக்கு இலவசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தமது சொந்த நாடுக ளுக்குத் திரும்பும் போது எவ்வித இடையூறும் இன்றி இலங்கை விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கூற்றுப்படி, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் நெருக்கடி, வான்வெளி மீதான தடை மற்றும் அந்தக் காலகட்டத்தில் விமான சேவைகள் இயங்காததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post