மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேரம் மின்வெட்டு; மின்சார சபை பொறியிலாளர்கள் எச்சரிக்கை - Yarl Voice மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேரம் மின்வெட்டு; மின்சார சபை பொறியிலாளர்கள் எச்சரிக்கை - Yarl Voice

மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேரம் மின்வெட்டு; மின்சார சபை பொறியிலாளர்கள் எச்சரிக்கைபருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்து வதே தற்போதைய மின் நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்றும் கூறுகின்றனர்.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வாங்குவது பெரும் சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க எந்த வழியில் சென்றாலும் செலவு ஏற்படும்  என பொறியியலாளர்கள் கூறுகின்றனர் .

எனவே, அலுவலகங்களில் உள்ள குளிரூட்டிகள், தெரு விளக்குகளை அணைத்தால் மட்டுமே மின்வெட்டை மிகக் குறுகிய நேரத்துக்கு கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post