தோனி' மனைவியா இருக்குறதால படுற கஷ்டம்.." மனம் திறந்த சாக்ஷி.. "இந்த ஒண்ணு தான் ரொம்ப கொடுமை" - Yarl Voice தோனி' மனைவியா இருக்குறதால படுற கஷ்டம்.." மனம் திறந்த சாக்ஷி.. "இந்த ஒண்ணு தான் ரொம்ப கொடுமை" - Yarl Voice

தோனி' மனைவியா இருக்குறதால படுற கஷ்டம்.." மனம் திறந்த சாக்ஷி.. "இந்த ஒண்ணு தான் ரொம்ப கொடுமை"
ஐபிஎல் மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்திருந்த நிலையில், இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த பல முடிவுகள், அதிகம் வியப்பை தான் ஏற்படுத்தியிருந்தது.

இருந்தாலும் நடப்பு சாம்பியன் என்பதால் இந்த முறையும் பெரிய அளவில் எதிரணியினருக்கு சவாலாக சிஎஸ்கே விளங்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஆரம்பமாகும் 15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடர்
மொத்தம் 10 அணிகள் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளதால், இரண்டு குழுக்களாக ஐபிஎல் அணிகள் பிரிக்கப்பட்டு, போட்டிக்கான அட்டவணை போடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால், அனைத்து ஐபிஎல் அணிகளும் தற்போதே தீவிரமாக தயாராகும் வேலையில் இறங்கியுள்ளது.
சிஎஸ்கே அணி தீவிரம்
அதிலும் குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தற்போதே தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி, ராயுடு ஆகியோருடன் இளம் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு வேண்டி தயாராகி வருகின்றனர்.
ஸ்பெஷல் வீடியோ
இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டிருந்தது. இதில், சிஎஸ்கே அணி வீரர்களின் மனைவிகள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசும் தோனியின் மனைவி சாக்ஷி, "அலுவலகத்திற்கு செல்லும் ஒருவரை மணந்து கொண்டால், நாம் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், நமது கணவன்மார்கள் கிரிக்கெட் ஆடுகிறவர்கள். இதனால், நாம் இன்னும் கூடுதல் விஷயங்களை அவர்களுக்கு வேண்டி மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
தோனி மனைவி சாக்ஷி
அதே போல, கிரிக்கெட் வீரரை மணந்து கொண்டால், நமக்கு பிரைவசி என்று ஒன்று இருக்கவே இருக்காது. கேமரா முன்பு நாம் எப்படி இருக்கிறோமோ, அதே போன்று நிஜ வாழ்வில் நாம் இருக்க மாட்டோம். குறிப்பாக, பொது வெளியில் எங்களைக் குறித்து பல விதமான கருத்துக்கள் பரவும். நண்பர்களுடன் நாம் வெளியே சென்றால் கூட, தவறாக எண்ணி கருத்துக்களை வெளியிடுவார்கள்.
பெருமை தான்
இருந்தாலும், பல லட்சம் பேரின் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, மக்கள் அதிகம் விரும்பும் ஒரு போட்டியின் பகுதியாக எங்களின் கணவர்கள் இருப்பதால், அதனை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என சாக்ஷி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post