20வது திருத்தத்தை நீக்குங்கள் - ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதை நிறுத்துங்கள் - பௌத்த பீடாதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் - கடும் எச்சரிக்கை - Yarl Voice 20வது திருத்தத்தை நீக்குங்கள் - ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதை நிறுத்துங்கள் - பௌத்த பீடாதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் - கடும் எச்சரிக்கை - Yarl Voice

20வது திருத்தத்தை நீக்குங்கள் - ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதை நிறுத்துங்கள் - பௌத்த பீடாதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் - கடும் எச்சரிக்கைநாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டு;ம் என வேண்டுகோள் விடுத்துள்ள பௌத்தபீடாதிபதிகள் இல்லாவிட்டால் பௌத்த சங்கசாசனத்தை பிரகடனப்படுத்தவேண்டிய நிலையேற்படும் என எச்சரித்துள்ளனர்.
மல்வத்தை அஸ்கிரி அமரபுர ராமன்ய பௌத்தபீடாதிபதிகள் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் 20வது திருத்தத்தை இரத்துச்செய்யவேண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதை கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிகளை தீர்க்க உதவாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற படுகொலையை கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியையும் பிரதமரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த தருணத்தின் தேவை குறித்து உணர்வுபூர்வமாகயிருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்,எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post