இராஜினாமா செய்து இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவும் -அநுர பிரியதர்ஷன யாப்பா - Yarl Voice இராஜினாமா செய்து இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவும் -அநுர பிரியதர்ஷன யாப்பா - Yarl Voice

இராஜினாமா செய்து இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவும் -அநுர பிரியதர்ஷன யாப்பாஅரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறும், இடைக்கால அமைச்சரவையை நியமிப்பதற்கு உதவுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குடிமக்கள் மிகவும் துயரத்தில் உள்ளதாகவும் அதனால் வீதிக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனவே அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவைக்கு நாட்டின் நிர்வாகத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் திறமையான நபர்கள் எதிர்கட்சியில் இருப்பதை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனால் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசை பெஞ்சில் மாத்திரமே அமர்ந்துள்ளனர்.

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இல்லை என்பதற்கு இந்த நடவடிக்கை சாட்சியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு ஜனாதிபதி, பிரதமர் அல்லது குறிப்பிட்ட குடும்பத்திற்கு சொந்தமானது அல்ல என்பதால், தற்போதைய போக்கு உடனடியாக மாற வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post