எனக்காடா வயசு ஆச்சு..." கடைசி 4 பந்து.. மும்பைக்கு மரண காட்டு காட்டிய தோனி' - Yarl Voice எனக்காடா வயசு ஆச்சு..." கடைசி 4 பந்து.. மும்பைக்கு மரண காட்டு காட்டிய தோனி' - Yarl Voice

எனக்காடா வயசு ஆச்சு..." கடைசி 4 பந்து.. மும்பைக்கு மரண காட்டு காட்டிய தோனி'



ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் என்றாலே, நிச்சயம் போட்டி முடிவது வரை பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

அந்த வகையில், இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் முறையாக லீக் இன்று (21.04.2022) போட்டியில் மோதி இருந்தது.
இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், இந்த இரு அணிகள் மோதுவது என்பதால், போட்டிக்கு முன்னரே வேற லெவலில் விறுவிறுப்பு இருந்தது.
மும்பை அணியை மீட்ட திலக்
டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி, ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது, மும்பை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ஓரளவுக்கு ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக, திலக் வர்மா 51 ரன்கள் எடுத்து, அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவி இருந்தார்.
கடைசி ஓவர் வரை த்ரில்
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியும் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு கடைசி வரை நிலவி இருந்தது. மற்ற வீரர்கள் அவுட்டாகி கொண்டிருக்க, 19 ஆவது ஓவரில் பிரெட்டோரியஸ் மற்றும் தோனி ஆகியோர் களத்தில் இருந்தனர். இதன் பிறகு, கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
சீட் நுனிக்கு வந்த ரசிகர்கள்
இந்த ஓவரை உனத்கட் வீச, முதல் பந்தில் பிரெட்டோரியஸ் அவுட் ஆனார். தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த பிராவோ, சிங்கிள் எடுக்க கடைசி நான்கு பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங் பக்கம் தோனி இருக்க, சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.
இதன் பின்னர், இரண்டு பந்துகளுக்கு 6 ரன்கள் என்ற நிலை வந்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இன்னும் பரபரப்பானார்கள். தொடர்ந்து, தோனி 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததும், அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்து விட்டனர். மைதானத்தில் இருந்த சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகர்கள் முகத்தில், எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பான நிலை உருவானது.
தோனி ஸ்டைலில் 'பினிஷ்'
இந்த பந்தை தோனி பவுண்டரிக்கு விரட்ட, அங்கிருந்த ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் தோனி தோனி என கத்திக் கொண்டாடியது, தோனியின் பழைய பினிஷிங் காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. அதே போல, தோனி ஃபார்மில் இல்லை என குறிப்பிட்டு வந்த நபர்களுக்கும் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் தோனி.
இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. மறுபக்கம், ஆடியுள்ள 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ், கடைசி இடத்தில் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post