தமிழரசுக் கட்சி யாழில் விசேட கூட்டம்! - Yarl Voice தமிழரசுக் கட்சி யாழில் விசேட கூட்டம்! - Yarl Voice

தமிழரசுக் கட்சி யாழில் விசேட கூட்டம்!
தந்தைசெல்வாவின் 45 வது நினைவு தினம் மற்றும் மே தினம் தொடர்பான கலந்துரையாடல் யாழ் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா ,சீறீதரன்,யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டம் நினைவில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வவுனியாவில் நடைபெற்ற இலங்கைதமிழரசுக்கட்சியின் உயர்மட்ட குழுவிலே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியிலும் உலக தொழிலாளர் தினத்தை எழுச்சியுடன் மேற்கொள்வது என்ற தீர்மானம் எட்டப்பட்டது.


யாழ்ப்பாணத்திலிருந்து 10 தேர்தல் தொகுதிகளிலும் மேதின ஊர்திகள் வந்தடைவதோடு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியை வந்தடையும்.

 பின்னர் அனைத்து ஊர்திகளும் ஊர்வலமாக டிப்போ சந்தியிலே இருக்கின்ற பூங்காவை வந்தடைந்ததுடன் தொழிலாளர் தின எழுச்சி கூட்டம் நடை பெற்றும்.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன் மற்றும் யாழ் வர்த்தக சங்க தலைவர் ஜெயசேகரம் எனப் பலரும் கலந்து கொண்டன

0/Post a Comment/Comments

Previous Post Next Post