கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்புநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அலுவலக நாட்கள் மற்றும் களப்பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கம் அரச சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அலுவலகம் மற்றும் களப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் முன்னர் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் அலுவலக செயற்பாடுகளிலும் திங்கள் கிழமை பொதுமக்கள் தினமாகவும் கிராம சேவகர்கள் பணியாற்றியிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post