யாழ் மத்திய கல்லூரிக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப்பு!!! - Yarl Voice யாழ் மத்திய கல்லூரிக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப்பு!!! - Yarl Voice

யாழ் மத்திய கல்லூரிக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப்பு!!!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பாவனைக்காக சுமார் 7.6 மில்லியன் பெறுமதியான அதி நவீன பேருந்து ஒன்று பாடசாலையின் பழைய மாணவர்களால் கட்டமைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பேருந்து குழுமம் என்ற அமைப்பினரால் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பேருந்தை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று காலை (19) ஜெஷிமா ரெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் மத்திய கல்லூரியின் சிரேஸ்ட பழைய மாணவருமான முகமட் ஜெமில் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கலாநிதி எழில்வேந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பல்துறைசார் தொழில்துறைகளில் இருந்துவரும் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுமார் இரு நூறு ஆண்டுகளுக்க மேற்பட்ட வரலாற்றை கொண்ட யாழ் மத்திய கல்லூரியானது 90 களுக்கு முன்னர் வடபகுதியில் பேருந்து ஒன்றை தன்னகத்தே கொண்டிருந்த ஒரே ஒரு பாடசாலையாக காணப்பட்டுள்ளது

அதன்பின்னர் அதாவது 90 களின் பிந்தைய காலத்தில் நாட்டில் கணப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளால் பேருந்து வசதியை பெறுவதில் பல்வேறு சவால்களையும் அவற்றை பராமரிப்பதில் இடையூறுகளையும் பாடசாலை சந்தித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இந்த வரையறுக்கப்பட்ட  பேருந்து  குழுமம் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக மிகக் குறுகிய காலத்துக்குள் அதாவது இரண்டு ஆண்டுகளில் பாடசாலையின் கனவு நனவாக்கப்பட்டு அது இன்றையதினம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
படசாலைக்கு தேவையான அடிப்படை தேவைகளுள் பேருந்தும் அவசியமானதொன்று.  

அந்தவகையில் எதிர்பார்த்த கனவு நனவாகியுருப்பதால் இந்த கல்லூரியின் வரலாற்றில் இன்றைய நாள் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக பதியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post