தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்கள் பட்டினியின்றி வாழ்வதற்குத் தேவை யான சூழ்நிலையை உருவாக்குவது அரசாங்கத் தின் பொறுப்பாகும் என ஆணைக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எரிவாயு, எரிபொருள் மற்றும் நுகர்வுப் பொருட் களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்குவதன் மூலம் போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி யுள்ளது.
Post a Comment