நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் -சஜித் பிரேமதாச - Yarl Voice நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் -சஜித் பிரேமதாச - Yarl Voice

நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் -சஜித் பிரேமதாசஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன் றத்தில் கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஊர்வலத்தின் 5 ஆவது நாளான இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய திட்டங்களை எதிர்க் கட்சிகள் செயற்படுத்தும்.
ராஜபக்ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்காக, அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சில நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும்.

எதிர்வரும் வாரம் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஓர் இடைக்கால அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதை ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது போன்ற சூதாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பங்கேற்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post