15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏறக்குறைய மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.
இதனால் ஒவ்வொரு அணிகளும் தங்களின் அடுத்தடுத்த போட்டிகளில் மிகவும் கவனமாக வெற்றிக்கு வேண்டி ஆடி வருகிறது.
அதிலும் குறிப்பாக, நடப்பு தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள், முறையே 1 மற்றும் 3 ஆவது இடத்தில் உள்ளது.
நெருக்கடியில் சிஎஸ்கே..
அதே வேளையில், கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு தொடரில் சற்று தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. இதுவரை, 8 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, 9 ஆவது இடத்தில் உள்ளது.
matheesha pathirana starts practice in csk uploads video
மீதமுள்ள ஆறு போட்டிகளில் வென்றால் மட்டும் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது. இதனால், தீவிரமாக தயாராகி, தொடர் வெற்றிகளை குவிக்கவும் சென்னை அணி முனைப்பு காட்ட வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில், சென்னை அணி பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அதிகம் சொதப்பி வருகிறது.
குட்டி மலிங்கா என்ட்ரி..
ஐபிஎல் ஏலத்தில், 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே வாங்கிய தீபக் சாஹர், காயம் காரணமாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி விட்டார். இதனையடுத்து, ஆடம் மில்னேவும் காயம் காரணமாக விலகி விட்டார். தொடர்ந்து, மொயீன் அலியும் சில போட்டிகளை காயம் காரணமாக தவற விட்டிருந்தார். இப்படி, காயமும் ஒரு பக்கம் சென்னை அணியை அச்சுறுத்தி வருகிறது.
இதில், தீபக் சாஹருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படாத நிலையில், ஆடம் மில்னேவுக்கு பதிலாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் மதீஷா பதிரானாவை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்திருந்தது. U 19 உலக கோப்பைத் தொடரில் ஆடி இருந்த மதீஷா, வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அப்படியே இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை போலவே பந்து வீசும் இவருக்கு, குட்டி மலிங்கா என்ற பெயரும் உண்டு.
ரசிகர்களின் கோரிக்கை
இந்நிலையில், சென்னை அணியில் இணைந்துள்ள மதீஷா, பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்றை சிஎஸ்கே தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மலிங்கா போலவே பந்து வீசும் மதீஷாவை அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Post a Comment