ஜூன் மாதத்துக்குள் கோழி இறைச்சி- முட்டை விலை அதிகரிக்கும் சாத்தியம் - Yarl Voice ஜூன் மாதத்துக்குள் கோழி இறைச்சி- முட்டை விலை அதிகரிக்கும் சாத்தியம் - Yarl Voice

ஜூன் மாதத்துக்குள் கோழி இறைச்சி- முட்டை விலை அதிகரிக்கும் சாத்தியம்
எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் மாகமகே தெரிவித்துள்ளார்.

கால்நடைத் தீவன விலைகள் மற்றும் இதர செலவுகள் பெருமளவில் அதிகரிப்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என்றார்.

சிறு மற்றும் நடுத்தர கால்நடை வளர்ப்புத் தொழிலாளர்கள் அந்தத் தொழில்களிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்றும், அவை தொடர்ந்தால், நாட்டில் ஒரு சில பெரிய அளவிலான தொழில்முனைவோர் மட்டுமே எஞ்சுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post