ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! யாழ் வந்த தூதுவரிடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை - Yarl Voice ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! யாழ் வந்த தூதுவரிடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை - Yarl Voice

ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! யாழ் வந்த தூதுவரிடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை




யாழ் வந்த இலங்கைக்கான அமெரிக்க  தூதர் ஜீலி சுங்கிடம் ரம் அது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் தமது தாய்மாரின் ஏக்கங்களையும் ஆதங்ககளையும் தெளிவு படுத்தினோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் யாழ் மாவட்ட தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்தார்.


நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்கும், அமெரிக்கத் தூதுவர் ஐீலி சுங்கைக்கும் இடையிலான சந்திப்பை முடித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஒரு பெண்மணியாக இருக்கின்ற நிலையில் உறவுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் அலையும் தாய்மாரின் ஏக்கங்களையும் அங்கங்களையும் இலகுவில் விளங்கிக் கொண்டார்


 எமது உறவுகளை தொலைத்துவிட்டு  பல வருடங்களாக வீதிகளில் போராடும் எமக்கு சர்வதேசத்திடமிருந்தே தீர்வு கிடைக்கும் என நாம் நம்புவதாக அவரிடம் தெரிவித்தோம் .

உறவுகளை தொலைத்து விட்டு தேடி அலையும் தாய்மார்கள் பலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கான நீதி தாமதிக்க படுவதாகவும் அவரிடம் சுட்டிக் கட்டினோம்.

இறுதி யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களை கடந்த நிலையில் அரச பாதுகாப்பு படைகளிடம் கையில் கொடுக்கப்பட்டது உறவுகளுக்கு என்ன நடந்தது என  இலங்கை அரசால் இதுவரை கூறமுடியவில்லை.

 இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு   அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தோம் .

எமது கோரிக்கை தொடர்பில்  ஆழ்ந்து கவனித்த தூதுவர் எமக்காக தொடர்ந்தும்  குரல் கொடுப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா மற்றும் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post