முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்ட அமெரிக்க தூதுவர்! - Yarl Voice முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்ட அமெரிக்க தூதுவர்! - Yarl Voice

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்ட அமெரிக்க தூதுவர்!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று (26) காலை முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.

டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவருக்கு குறித்த மனிதநேய பணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், கள ஆய்வினையும் மேற்கொண்டு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள மனிதநேய கண்ணிவெடி அகற்றம் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

தொடர்ந்து குறித்த பகுதியில் அகற்றப்பட்ட ஆபத்தமிக்க வெடி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்தும் குறித்த பகுதுியில் கண்ணிவெடிகள் காணப்படுகின்றமை தொடர்பிலு்ம, அவற்றை அகற்றவேண்டிய தேவைகள் தொடர்பிலும் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டாஸ் நிறுவனத்தின் பணியாளர்கனுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. குறித்த விஜயத்தின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள், டாஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது குறித்த மனிதநேயம் மிக்க பணியை முன்னெடுத்துவரும் ஊழியர்களை தூதுவர் பாராட்டியதுடன். தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் கூறியிருந்தார். அங்கு பணிபுரியும் பெண்களுடன் தனியாக புகைப்படம் ஒன்றினையும் அவர் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post