மின் வெட்டு நிலவுவது குறித்து தோனியின் மனைவி சாக்ஷி ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின் வெட்டு நிலவுவது குறித்து தோனியின் மனைவி சாக்ஷி ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.!
இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் அதிகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலக்கரி விலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால், நிலக்கரி விலை மேலும் வேகமாக உயரத் தொடங்கியது.இதுகுறித்து மின்சார பொறியாளர்கள் கூட்டமைப்பு சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை செய்திருந்தது. அதில் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனை தீவிரமடையும், அதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தனர். குறிப்பாக ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஹரியானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த பிரச்சனை இருக்கும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே நிலக்கரி பிரச்சனையை அரசு சரியாக கையாளவில்லை என்றும், 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு, 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது. அதனால் அச்சம் தேவையில்லை என மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‘மின்சாரத்தை சேமிக்க எங்களது கடமையை தொடர்ந்து செய்து வருகிறோம். ஆனாலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின் வெட்டு நிலவுகிறது? பல ஆண்டுகளாக வரி செலுத்துபவராக இந்த கேள்வியை அரசிடம் கேட்கிறேன்’ அவர் சாக்ஷி பதிவிட்டுள்ளார். இது தற்போது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment