சபையில் 113 ஐ நிரூபிக்குமாறு ரணிலுக்கு சஜித் அணி சவால் - சவாலை எதிர் கொள்வாரா ரணில்? - Yarl Voice சபையில் 113 ஐ நிரூபிக்குமாறு ரணிலுக்கு சஜித் அணி சவால் - சவாலை எதிர் கொள்வாரா ரணில்? - Yarl Voice

சபையில் 113 ஐ நிரூபிக்குமாறு ரணிலுக்கு சஜித் அணி சவால் - சவாலை எதிர் கொள்வாரா ரணில்?




பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எமது கட்சி ஆதரவு வழங்காது. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (14) சுட்டிக்காட்டியுள்ளது.

” மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரின் ஆசியுடன்தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியுள்ளார். எனவே, அவர் நாட்டை மீட்பாரா அல்லது ராஜபக்ச குடும்பத்தை காப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.
ஐக்கிய தேசியக்கட்சியை இல்லாது செய்தவர்தான் ரணில். மக்களுக்கும் அவர்மீது நம்பிக்கை இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post