திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஈழ உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் 5 பேரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் கருத்து வெளியிடுவதில்,
எங்கள் இரத்த உறவுகளான தமிழ் மக்களே. நாங்கள் உங்களை எங்களுக்காக பரிந்து பேச மனவேதனையோடு அழைக்கிறோம்.
விடுதலை என்பது எங்களுக்கு இறந்த பின்பு தான் கிடைக்கும் என்றால் அதற்கும் தயார் என்ற நிலையில்தான் இன்று 5வது நாளாக உண்ணாமல் எங்கள் விடுதலைக்காக காத்திருக்கிறோம்.
மனதுக்குள் ஒரே ஒரு கவலை மாத்திரம் எங்கள் குடும்பங்கள் எங்கள் குழந்தைகள் நாங்கள் இறந்த பின்பு என்ன செய்வார்கள் என்று எண்ணும்போது உயிருக்குள் ஏதோ ஒரு பெரும் அழுகுரல் கேட்கிறது.
மனம் இரங்கி எங்களுக்காக ஒரே ஒரு முறை குரல் கொடுங்கள் எங்கள் இரத்த உறவுகளே.! என உருக்கமாக வேண்டிநிற்கின்றனர்.
Post a Comment