நாவற்குழியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் - Yarl Voice நாவற்குழியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் - Yarl Voice

நாவற்குழியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் இடம்பெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களிடையே சூழல் அறிவைப் புகட்டி சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கோடும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்று நாவற்குழி ஐயனார் கோவிலடியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்ட மாணவர் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இக்குறிப்பேடுகளுக்கான அனுசரணையைக் கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பு வழங்கியிருந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post