இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஜந்து பேர் இந்தியாவில் தஞ்சம்!!! - Yarl Voice இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஜந்து பேர் இந்தியாவில் தஞ்சம்!!! - Yarl Voice

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஜந்து பேர் இந்தியாவில் தஞ்சம்!!!



இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியா சிதம்பர புரம் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகொன்றில் புறப்பட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் கரை இறங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும், தொழில்களை இழந்து, வாழ்வாதரம் இன்றி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டமையாலேயே தாம் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post