முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாவது நாள் நினைவேந்தல் இன்று (14.05.2022) யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் அனுஷ்டிப்பு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள படுகாலை நினைவுத்தூபியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் சிறிலங்கா விமானப் படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் 1995 யூன் மாதம் 9ம் திகதி சிறிலங்கா அரசபயங்கரவாதம் நடாத்திய விமானக்குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment