அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
தம்பதியருக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன.
ஆசிரியையின் கணவர் ஜோ கார்சியா தனது மனைவி இர்மா கார்சியாவின் மரணத்தால் மிகவும் வருத்தமடைந்ததாக அவர்களது உறவினர் ஒருவர் கூறினார்.
“அவருடைய இதயம் உடைந்திருக்க வேண்டும். அவர் தனது மனைவியை மிகவும் நேசிக்கிறார்” என்றார் அவர்களின் மருமகன்.
துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியை ஒருவர் மற்றும் 19 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment