எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இன்றும் (11) கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
Post a Comment