நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது.
திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் கொழும்பில் அமைதியான முறையில் இயங்கிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் கோபத்தில் பதிலடி கொடுத்ததில் இருந்து பல வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.
அமைதியின்மை வெடித்ததில் இருந்து பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளன.
மக்களை தாக்கி சொத்துக்களை சூறையாடு வதை தடுக்கும் வகையில் இராணுவத்திற்கு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சினால் துப்பாக்கி சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைப் பின்பற்றி இலங்கை காவல்துறை, நாட்டில் மேலும் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க பொலிஸாருக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment